சென்னை: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சிக்கி படாத பாடு படும் ஹவுஸ் ஓனர்!
குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். இவர், ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற சினிமா படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது, தனது 4வது படமாக, ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கிஷோர், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், சென்னையை உலுக்கிய 2015 வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு, அனைவரும் ஆதரவு தரும்படி, லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்கனவே பல தேதிகள் குறித்தும் கடைசி வரை வெளியாகவில்லை. இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனுடன் திரையுலகை சேர்ந்த சிலருக்கு உள்ள பிரச்சனை தான் காரணம் என்று சொல்கிறார்கள்.