எல்லை மீறும் வனிதா, கஸ்தூரிக்கு வலுக்கும் ஹவுஸ் மேட்ஸ் ஆதரவு ! ரிவர்ஸ் ஆகறதா பிக்பாஸ் வீடு ?

கஸ்தூரி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகதான் பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக நுழைந்தார் என்றாலும் மற்ற ஹவுஸ் மேட்சுடன் அவருக்கான இணக்கம் முதல் நாளில் இருந்தே வந்துள்ளது.


போட்டியாளர்கள் , விளையாட துவங்கிய நேரத்தில் அவர் அவர்களது விளையாட்டை வெளியில் இருந்து பார்த்து, நிதானமாக தனக்கான நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே வீட்டில் இருந்து ஒரு முறை எலிமினேஷன் ஆன நிலையில் மீண்டும் வைல் கார்டு போட்டியாளராக வனிதா களம் இறங்கிய நாள் முதலாக, இருவருக்குமான பனிப்போர் முடிந்த பாடில்லை.

கமல் ஹாசன் நேராக கேட்கும் அளவிற்க்கு இருவருக்குமான மோதல் மோசாமடைய துவங்கியள்ள நிலையில், வனிதா நியாயமாக பேசக்கூடிய நபர் என ஒரு பக்கம் சொல்லபட்டாலும் கூட,

எல்லாவற்றுக்கும் ரியாக் செய்து, குறிப்பாக கஸ்தூரி எது செய்த்காலும் அதில் குற்றம் சொல்வதும், கார்னர் செய்வதும் அப்பட்டமாக வெளியில் இருப்பவர்களுக்கு தெரிகிற அளவில் தான் நடக்கிறது.

இதற்கிடையில், கஸ்தூரி இருந்தால் சமைக்க மாட்டேன், அவர் சுகாதார்மற்றவர், வகை வகையாக சமைக்க கூடியவத் அல்ல என அவர் எடுத்து வைக்கும் வாதம் சற்று மற்ற போட்டியாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

அதிலும் அவர் இதை முன் வைக்கிற போது சாண்டி உட்பட மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஆதரவு, அமைதியாக இருக்க கூடிய கஸ்தூரி பக்கமாக வலுக்க துவங்கு கிறது.