நாள் முழுவதும் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட வேலைக்காரி! உரிமையாளர் தகாத செயல்! அதிர வைக்கும் காரணம்!

விலையுயர்ந்த பர்னிச்சரை வெயிலில் வைத்த வேலைக்காரப் பெண்ணை நாள் முழுவதும் மரத்தில் கட்டிப் போட்ட அவலம்!


சவுதி அரேபியாவில் பணக்கார குடும்பத்தில் வேலைபார்த்து வந்த பெண் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த லவ்லி அகோஷ்டா (26). விலையுயர்ந்த பர்னிச்சர் ஒன்றை வெயிலில் தெரியாமல் வைத்துள்ளார். இதற்க்காக ஆத்திரமடைந்த  குடும்பத்தினர் லவ்லியை ஒருநாள் முழுவதும் கை மற்றும் கால்களை மரத்தோடு கட்டி வைத்துள்ளனர். இதை கண்ட சக பெண் ஊழியர் புகைப்படம் எடுத்து இந்த அவலத்தை அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளார். 

இதையறிந்த பிலிப்பைன் நாட்டு தூதரகம், லவ்லியை அந்த குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். இந்த கொடுமையான சம்பவம் குறித்து பதில் அளித்த பணக்கார குடும்பத்தினர், "செய்த தவறை லவ்லி உணர வேண்டும் என்றே இப்படி செய்தோம்" என்றனர். மேலும், லவ்லி கூறியதாவது, என்னைப்போன்று இன்னொரு பிலிப்பைன் பெண்ணும் அங்கு பணிபுரிகிறார். அவருக்கும் ஆபத்து நேர வாய்ப்பு உள்ளது. அவரையும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.