கணவன் கண் முன்னே கொள்ளையர்களிடம் சிக்கிய மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! பதற வைக்கும் சம்பவம்!

ஓசூர் அருகே பட்ட பகலில் பைக்கில் வந்த பெண்ணின் 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்று, பெண் தடுத்ததால் நடு ரோடில் தர தரவென இழுத்து செல்லபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகில், பேரண்டபள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் சென்றுக்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பல்சர் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் இளம்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி.சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட பெண் செயினை பறிக்க விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பெண்ணை சங்கிலியுடன் சேர்த்து கீழேத்தள்ளினர்.

இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே  விழ பெண் என்றும் பாராமல் நடு ரோடில் தரத்தர வென இழுத்து செல்லபட்டதில் முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்தார் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தினர்,

இதற்கிடையில் மர்ம நபர்கள் தப்பித்து விட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர் மேலும் ஊருக்குள் சி.சி.டி.வி கேமராக்கள் இருப்பதால், நெடுஞ்சாலையில் செல்வோரை குறிவைத்து மர்ம கும்பல் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள்.அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், பிரபல நெடுஞ்சாலை கொள்ளையன் கைது,  செய்யபட்டதும் குறிப்பிடத்தக்கது.