வீட்டின் முன்பகுதி விழுப்புரம்..! பின்புறம் கள்ளக்குறிச்சி..! மாவட்டங்கள் பிரிப்பால் அதிர்ச்சியான தந்தை - மகன்!

தமிழகத்தல் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் எல்லை பிரித்ததில் தந்தை ஒரு மாவட்டத்திற்கும், மகன் ஒரு மாவட்டத்திற்கும் சென்றுவிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டம், பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டம்.


நிர்வாக வசதிகளுக்காகவும், மக்கள் தங்களை குறைகளை ஆட்சியர் அலுவலத்திற்கு தெரிவிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை அரக்கோணம் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருக்கிறது கருவேப்பிலை பாளையம். இந்த ஊரின் சில தெருக்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் சில தெருக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்திலும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கிறது.

அதே வீட்டில் இருக்கும் அப்பாவின் குடும்ப அட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் திருமணமான மகனின் குடும்ப அட்டை விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கிறது. அதவாது தந்தை ஆட்சியர் அலுவலகம் செல்லவேண்டும் என்றால் 5 நிமிடத்தில் சென்றுவிடுவார், ஆனால் மகனுக்கோ ஒருமணிநேரம் ஆகும். எனவே இதுபோன்ற சிக்கல்களை கலைந்து தாலுகாக்களை முறையாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.