ஹாஸ்டலில் வார்டன்கள் பாலியல் வல்லுறவு! 2 சிறுமிகள் மயங்கி விழுந்த பயங்கரம்!

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் இரண்டு பேரை பாலியல் வல்லுறவு செய்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு கொடூரமாக வார்டன்கள் நடந்து கொண்டனர்.


மராட்டிய மாநிலம் நாக்பூர் மாநிலத்தில் உள்ள சந்திரபூர் அரசு மருத்துவமனையில் 2 சிறுமிகள் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும்  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறினர்.

இதனை அடுத்து அச்சிறுமிகள் தங்கியிருக்கும் பழங்குடி மாணவிகளுக்கான விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விடுதியின்  கண்காணிப்பாளரான சாபன் பச்சாரேவின் மற்றும் ஒருவர் சேர்ந்து சிறுமிகளை பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரை  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  விடுதியில் மேலும் சில சிறுமிகளும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.