கீழ வாம்மா ஊசி போடனும்! மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு நேர்ந்த விபரீத அனுபவம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.அவருக்கு உதவியாக அவரது தாயாரும் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அப்போது இரவு நேரம் என்பதால் இளம் பெண்ணிற்கு ஊசி போட வேண்டும் என மருத்துவ வார்டில் உள்ள சிவானந்தம் என்பவர் மருத்துவமனையில் கீழ்தளத்தில் உள்ள ஊசி போடும் அழகே அப்பெண்ணை வரச்சொல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் அப்பெண் தனது தாயாரை எழுப்பியுள்ளார் அதற்கு அந்த நபர் இந்த நேரத்தில் அவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் நீங்கள் தனிமையில் வந்தாலே போதும் அங்குள்ள பெண் பணியாளர்கள் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என அப்பெண்ணை தனிமையில் கீழே அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவருக்கு முதலில் மாத்திரை கொடுக்கப்பட்டது மாதிரியை விளங்கிய பெண் இளம்பெண் மயக்க நிலையில் இருந்துள்ளார்.  அப்போது சிவானந்தன் அப்பெண் மயக்கம் அடைந்ததும் அவரது நண்பரான அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் விஷால் என்பவரை அழைத்து இருவரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அப்பெண் கண் விழித்தவுடன் தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார் இதையடுத்து இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிவானந்தன் மற்றும் விஷால் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இவ்வாறு வரும் நோயாளிகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.