பூண்டும் தேனும் போதும் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க! பழைய வைத்தியம்!

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். சுறுசுறுப்பு தன்மை கூடும். உடல் அழகான தோற்றம் பெறும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவும்.