ஓரினச்சேர்க்கையாளர் ஜேம்ஸ் பால்க்னர்! ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் விபரீதம்!

தனது 29வது பிறந்த நாளை முன்னிட்டு பால்க்னர் அளித்த விருந்தின் போது எடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் ஃபால்க்னர் நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது தாய் மற்றும் நண்பர் ஒருவருக்கு உணவு விடுதியில் அவர் விருந்து அளித்தார். 

அத்தோடு மட்டும் அல்லாமல் தனது ஆண் நண்பருக்கு தான் கொடுத்துள்ள விருந்து சிறப்பானது என்று பால்க்னர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து பால்க்னர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் அதனால் தான் தனது பாய் பிரண்டுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

சில கிரிக்கெட் வீரர்களும் கூட  பால்க்னர் ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டதை பாராட்டி ட்வீட் செய்தனர். ஆனால் இதனை பார்த்து பதறிப்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பால்க்னர் ஓரினச் சேர்க்கையாளல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.