உடல் எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களா? இதை இரவில் குடிச்ச போதும்!

அந்த சீரகத்தைக் கொண்டு ஒரு டீ தயாரித்துக் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


சீரகத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து டீ தயாரித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியுமா? மிகச்சிறிய அளவிலான சீரகத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் உள்ள சத்துக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான உடலைப் பெற உதவி புரிபவையாகும்.

சீரக டீயை தினமும் இரவில் குடித்து வந்தால், உடலினுள் தேங்கி இருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக இருக்கும். உடலினுள் நச்சுக்களின் தேக்கம் இல்லையென்றால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி சிறப்பாக இருக்கும்.

சீரக டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். இந்த டீயில் உள்ள சீரகம் மற்றும் எலுமிச்சை, உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் சீரக டீயை தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும். சொல்லப்போனால் இந்த பானம் காலையில் அலாரம் வைத்தது போன்று உங்களை எழுப்பிவிடும்.