பெண்களின் மாதவிடாய், நீர்கட்டிகள் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்து!

பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள்(Cysts) கர்ப்பப்பையில் உருவாகுவதே பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்ரோம் ஆகும்.


தற்போது குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த நீர்க்கட்டிகள் உள்ளன. பெண்களின் மாதவிடாயும் நீர்க்கட்டி பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நீர்க்கட்டிக்கு தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

நீர்க்கட்டியினால் மாதவிடாய் சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாளி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் உள்ளவர்களுக்கு அன்றோஜென் (Androgen insensitivity syndrome) எனப்படும் ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒவுலேஷன் எனப்படும் கருமுட்டையை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில்லை.

அதனால் ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை அடைய முடிவதில்லை. அதனால் கருவுறுதல் நடைபெறாது. இந்த காலத்தில் பெரும்பான்மையான குழந்தையின்மை பிரச்சினைக்கு நீர்க் கட்டியே காரணம் ஆகும்.

நீர்க்கட்டி பிரச்சனை குணமாக கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்து. நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும். கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த கழற்சிக்காய் காயாகவும் கிடைக்கும், சில கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.

கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.

காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 அல்லது 4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்...