எந்த கஷ்டமும் இல்லாம ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கணுமா?

இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள்.


நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம்.

கருஞ்சீரகத்தை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ராலை குறைக்க கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.

இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.

புற்றுநோய் எதிர்ப்பு

கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம். கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.