தினமும் ஒரு டம்ளர் நெல்லைக்காய் சாறு குடிங்க! ஆன் பெண் இருவருக்குமே கண்டிப்பா முடி வளரும்!

மனிதர்களின் தலைமுடி முகத்திற்கு அழகான தோற்றத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயப்படுவது போன்றவற்றில் இருந்து காக்கும் கவசமாக இருக்கிறது.


தலை முடிகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்துபவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது.

இயற்கையான பளபளப்பு தன்மையை தலைமுடிக்கு கொடுக்கிறது. பொடுகு பேன் தொல்லை, தலை முடியில் ஏற்பட்டிருந்தாலும் அவை அறவே நீக்குகிறது. மேலும் தலை முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடிகளின் வேகமான வளர்ச்சியை தூண்டுகிறது. மிக இளவயதிலேயே இள நரை, பித்த நரை போன்றவை மிக விரைவில் ஏற்படுவதையும் அறவே தடுக்கிறது.

தினமும் காலையில் 20 முதல் 30 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் நார்ச்சத்து, உணவில் இருக்கின்ற கொழுப்புக்கள் உடலில் படிந்து எடை அதிகரிப்பதை தடுத்து. உடல் எடையை குறைக்கிறது. உடலில் ஏற்கனவே இருக்கின்ற அதிக கொழுப்புச்சத்துக்களையும் கரைத்து,அவற்றை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றி உடல் எடையை குறைக்கிறது.