உங்கள் பாதங்களின் வெடிப்புகள் வலி கொடுப்பதல்லாமல் அழகையும் கெடுகிறதா?

பாதங்களில் உள்ள வெடிப்புகள் அழகைக் கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலியைப் போக்கவும், வெடிப்பைப் போக்கவும் கருப்பு உப்பு சிறந்த தீர்வைத் தருகிறது.


ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பக்கெட் நீரில் உங்கள் பாதங்களை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும்.

தொடர்ந்து இப்படி செய்து வருவதால் பாத வெடிப்பின் காரணமாக உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு நிவாரணம் பெறுவதை உங்களால் உணர முடியும். மேலும் கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றியுள்ள இறந்த அணுக்களைப் போக்கி பாதங்களை மென்மையாக்கும்.

கருப்பு உப்பு ஒரு இயற்கையான ஸ்க்ரப்பிங் மூலப்பொருள். இதனை சருமத்தில் தேய்ப்பதால் பல அற்புதங்கள் நடக்கும். குளிர் காலத்தில் உங்கள் சருமத்தில் பருக்கள் , கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளுக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் என்றால் சிறிதளவு கருப்பு உப்பை உங்கள் சருமத்தில் ஸ்க்ரப் செய்து வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

கருப்பு உப்பு கொண்டு சருமத்திற்கு ஸ்க்ரப் செய்து வருவதால் இறந்த அணுக்கள் வெளியேறுகிறது. முக்கியமாக விலை அதிகமான பேஷியல் செய்த பலன் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.