இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.


புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, தவறான உணவுப் பழக்கம், மரபியல் கோளாறு மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், இளமைப் பருவத்திலும் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படலாம். ஆனால் சில எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் உங்கள் கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களை அகற்றி விடலாம்.

1/2 தேக்கரண்டியளவு தயிர், 1/2 தேக்கரண்டியளவு தேன், ½ கப் அன்னாசி கூழ் பேஸ்ட் எடுத்து ஒரு கிண்ணத்தில் மூன்று பொருட்களையும் போட்டுக் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை எடுத்து கண்களைச் சுற்றித் தடவுங்கள். 10 நிமிடங்கள் வைத்துக் காய்ந்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

ஒரு தேக்கரண்டியளவு தர்பூசணி கூழ் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு பாலாடை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் பேஸ்ட் போல் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கண்களைச் சுற்றித் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவுங்கள். 

1 அல்லது 2 தேக்கரண்டியளவு காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பாலில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல முடிவுகளை விரைவான பெறத் தினமும் இந்த முறையைப் பின்பற்றலாம். 

ஒரு தேக்கரண்டியளவு ஓட்ஸ் மாவு மற்றும் ஒரு தேக்கரண்டியளவு சூடான பால் எடுத்து கிண்ணத்தில் ஓட்ஸ் மாவு போட்டு மென்மையான பேஸ்டாக கிடைக்கும் வரை சிறிது சிறிதாகச் சூடான பாலை ஊற்றுங்கள். பின்னர் பேஸ்ட் எடுத்து உங்கள் கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். சுருக்கங்கள் விரைவில் அகற்ற விரும்பினால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யுங்கள்.