கல்வி பயிலும் கரங்களில் கட்சிக் கொடி! ரூ.50 கொடுத்து பள்ளி மாணவர்களை வளைக்கும் துயரம்!

கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் பள்ளி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பின்னால் வாக்களிப்பு கோஷமிட்டு செல்லும் அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் வாக்கு சேகரிப்பில் கூச்சலிட்டபடி ஈடுபட்டு வந்தனர். இந்த தாங்காத வெயிலிலும் இப்படி மாணவர்கள் அரசியல் பிரச்சாரத்தின் ஈடுபட்டதை கண்டு ஆச்சரியப்பட்டு அழைத்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

இவர்கள் தலா ரூ.50 ரூபாய் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபடும் படி அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.

பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக தேர்தல் கட்சிகள் இப்படி ஒரு அவலமான செயலில் ஈடுபட்டது சற்று முகம் சுளிக்க வைக்கும் வண்ணம் உள்ளது.