இந்தி மட்டும் தான் இந்தியாவின் ஆட்சி மொழியா? பள்ளிக் கல்வித்துறையின் அயோக்கியத்தனம்! கல்வியாளர்கள் அதிர்ச்சி!

7 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்திய ஆட்சி மொழி இந்தி என அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!


புதிய பாடத்திட்டத்திற்க்கான புத்தகங்கள் நேற்று மாணவர்களுக்கு வழங்கபட்ட நிலையில், 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் , இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 எனவும் அதில் இந்திய ஆட்சி மொழி இந்தி என அச்சிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே 1 மற்றும் 2 ஆம் வகுப்பு புத்தகங்களில் நாட்டுப்பண் எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து தற்போது இந்தி ஆட்சி மொழி என குறிப்பிடபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வளரும் மாணவ பிள்ளைகள் இடையே தவறானக் கருத்துகளை பரப்பும் இந்த செயலை கண்டித்து தொடர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாடப்புத்தகங்களை உடனடியாக திரும்ப பெற்று திருத்தபட்ட புத்தகங்களை வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே தமிழ் புத்தகத்தில் பாரதியின் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.