ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் மட்டும் இந்தி இருக்கலாமா? திமுக., வினர் மட்டும் சாராய ஆலை நடத்தலாமா? என்ன கேள்விடா இது?

உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்றுதான் தி.மு.க.வினர் இந்தி பிரச்னையை பார்த்து வருகிறார்கள்.


தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கற்கவேண்டும் என்று சொல்லப்பட்டதும், கடுமையாக எதிர்த்தது தி.மு.க.தான். ஆனால், அந்த நன்றி உணர்ச்சிகூட இல்லாமல் பி.ஜே.பி.யினர் தி.மு.க.வை இந்த விஷயத்தில் திட்டுவதுதான் பரிதாபம். இப்போது ராஜா வெளியிட்டிருக்கும் பட்டியலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் நடத்தும் சன் ஷைன் சீனியர் செகன்டரி (சிபிஎஸ்இ) பள்ளி, கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மருமகன் சி.கே.ரங்கநாதன் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளி,

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனின் பேரன் வெற்றிஅழகன் சென்னை நொளம்பூரில் நடத்தும் டவுன் பள்ளி (சிபிஎஸ்இ), முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி சகோதரர் தேவராஜ் நடத்தும் சென்னை பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி, தி.மு.க. எம்..பி. ஜெகத்ரட்சகனின் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் பள்ளி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் கிங்க்ஸ்டன் இன்டர்நேஷனல் அகாடமி, திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் ஜீவா வேலுவால் நடத்தப்படும் ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி என 45 பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஹெச். ராஜா.

மக்களை எல்லாம் இந்தி படிக்கக்கூடாது என்று சொல்லும் தி.மு.க. கட்சியினர் மட்டும் சி.பி.எஸ்.சி. பள்ளி நடத்துவதும், அங்கு இந்தி சொல்லிக்கொடுப்பதும் சரிதானா என்று தி.மு.க.வினரிடம் கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் சூப்பரப்பு வகை.

அதாவது தி.மு.க. இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறது. இந்தியை கற்றுக்கொள்ளும் எவருக்கும் அது தடையாக இருப்பது இல்லை. இந்தி படிக்க வேண்டாம் என்று அது சொல்லவில்லை. அதை எங்கள் மீதோ அல்லது வேறு எந்த மாநிலத்தவர் மீதோ திணிக்க வேண்டாம் என்றுதான் திமுக சொல்கிறது. அதனால் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி இடம் பெற்று இருப்பதற்காக தி.மு.க.காரர்களை பாராட்ட வேண்டுமாம்.

அதாவது இந்தி படிக்கணும்னா எங்ககிட்டே மட்டும் வாங்கடா, சாராயம் குடிக்கணும்னா எங்க தி.மு.க.காரன் கம்பெனி சாராயம் மட்டும் குடிங்கடா என்கிறார்கல் தி.மு.க.வினர்.

எத்தனை நல்ல எண்ணம் தி.மு.க.வுக்கு?