பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகள் மாலை பள்ளி முடிந்த உடனேயே டியூஷன் செல்லும் வழக்கம் அதிகமாகி வருகிறது.
ட்யூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் வைத்த செம ஆப்பு!

இதற்கு காரணம் பெற்றோர்களுக்கு நேரமின்மையே பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் மற்றும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லித் தரவும் பெற்றோர்களுக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தினால் அவர்களை அருகிலுள்ள டியூசன் சென்டரில் சேர்த்துவிடுகின்றனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன் சென்று விடுகின்றனர். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி கூறியதாவது
தங்களின் சுயலாப நோக்கில் டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கலந்தாய்வில் எடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மல்லிகா என்பவர் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் சுய பணலாபத்திற்காக தனியாக டியூசன் எடுப்பதாகவும் அதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிகிறது. எனவே இது விதிமுறைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.
இதுபோல் தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து கடும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசை மிரட்ட, போராட்டங்களில் ஈடுபடுவதாக கூறிய நீதிபதி இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற ஆசிரியர்களின் மீது எந்த விதமான கருணையும் காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை பள்ளிக்கல்வி துறை மற்றும் தமிழக அரசு வரும் 8 வாரத்தில் அறிமுகப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த தொலைபேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களும் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்ஆசிரியர்கள் மீது புகார் ஏதேனும் வரும் நிலையில் அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களில் உள்ள அனைத்துபள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.