எல்லை பாதுகாப்பில் இனி ரோபோக்கள்! இந்திய ராணுவத்தின் அதிரடி மூவ்!

இந்திய எல்லையில் ரோபோக்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எல்லைப்பாதுகாப்பு பணிகளில் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை ஈடுபடுத்த இந்தியா ஆயத்தமாகி வருகிறது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், பெல் நிறுவனம், ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய ரோபோக்கள் தயாரிக்கும் பணி இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது- எனவே . இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோபோக்களின் மாதிரிகள் சோதனை முயற்சியாக எல்லையில் களம் இறக்கப்படலாம் என்கிறார்கள்.

மேலும் 2020ம் ஆண்டில் ரோபோக்கள் முழு அளவில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ரோபோக்கள் ஒன்றை உருவாக்க தற்போது  70 லட்ச ரூபாய் முதல் 80 லட்ச ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால் அதிக அளவில் தயாரிக்கும் போது விலை குறையும். 

,ரோபோக்களை எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் போது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். மேலும் எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணிக்க முடியும்.