இந்தியாவில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் சிம்பிள் தீர்வு இதோ.. கடைபிடிப்பாரா மோடி?

நரேந்திரமோடி முதல் ஐந்து ஆண்டு காலம் இந்தியாவில் ஆட்சி புரிந்தபோது, நாட்டில் எந்த பிரச்னையும் கலவரமும் சிக்கலும் ஏற்படவே இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியும், நேருவும்தான் நாட்டில் உள்ள அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று சொல்லிச்சொல்லியே நாட்கள் நகர்ந்துபோயின.


ஆனால், இந்த முறை மோடி பிரதமராக வந்தபிறகுதான் ஏகப்பட்ட பிரச்னைகள். எக்குத்தப்பு சிக்கல்கள். இதற்கெல்லாம் என்னதான் காரணம், எப்படி இவற்றை சரிசெய்வது என்று யோசித்த டெல்லி அதிகாரிகளுக்கு உண்மை நிலைமை தெரிந்துவிட்டது.

அதாவது, முன்பு ஏன் இந்திய நாடு அமைதியாக இருந்தது, இப்போது மட்டும் ஏன் கலவரத்தில் தவிக்கிறது என்பதற்கான உண்மையை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அதை நரேந்திர மோடியிடம் சொல்வதற்குத்தான் அச்சப்படுகிறார்கள்.

அப்படி என்ன கண்டுபிடித்தார்கள் என்று கேட்கிறீர்களா? கடந்த 5 வருடங்களில் மோடி இந்தியாவில் இருந்தது ஒருசில நாட்கள் மட்டும்தான். மீதி நாட்கள் எல்லாமே வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டு இருந்தார். இந்தியாவும் நிம்மதியாக இருந்தது.

அதேபோல், இப்போதும் மோடி வெளிநாட்டுக்குப் போனால் எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும் என்கிறார்கள். என்ன மோடி சார், எப்போ சீனாவுக்குப் போறீங்க..?