நான் ஹெல்மட் போட மாட்டேன்! என்ன பண்ணுவ? போலீசை கதற விட்ட ஸ்கூட்டர் நபர்! வைரல் வீடியோ!

சென்னையில் அதிக போக்கு வரத்து நெரிசலாக இருக்கும் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் வந்த நபரை விசாரித்த போலீசை பேசியே கடுப்பேற்றிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.


சென்னையி  நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்து காவல் துறையினர் சார்பில் ஹெல்மட் அணியாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் நிலையில்,

அண்ணாநகர் பகுதியில் அதிக நெரிசலில் ஹெல்மட் அணியாமல்  வந்த நபரை போலீசார் விசாரிக்க, நீ யார் என்னை கேட்க, நீ சொன்னால் செய்ய வேண்டுமா என வடிவேல் பாணியில் திரும்ப திரும்ப பேசுற நீ என நடுப்ரோடில் சத்தம் போட,

காலையில் பீக் நேரம் என்பதால் அவரை ஓரமாக அழைத்தும் வராமல் நடுவாக நின்று அவர் செய்த அலப்பறைகள் ஓவர், இந்த நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

மேலும் அவரை குறித்த தகவலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.