நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி..


ஃபானி புயல், சென்னைக்கு தென்கிழக்கில் 870 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை தீவிர புயலாக மாறக்கூடும். புயலானது, மே மாதம் 1-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவின் கரைக்கு அருகில் 300 கிலோ மீட்டர் தொலைவு வரை புயல் நகர்ந்து வரகூடும். 

ஏப்ரல் 30, மே 1ம் தேதிகளில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். காற்றை பொறுத்த வரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையும், சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வரையிலும் வீசும். மாலை 70 கிலோ மீட்டர் வேகம் வரை யிலும் வீசக்கூடும். 

ஏப்ரல் 30, மே 1 ஆகிய பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடற்பகுதியில் ஏப்ரல் 29 முதல் மே இரண்டாம் தேதி வரை செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் மீண்டும் கரை திரும்ப வேண்டும்.