ஜப்பான் நாட்டில் முதியவர் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தீராத வயிற்று வலி! ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! என்ன இருந்தது தெரியுமா?

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண வயிற்று வலி என்று தகுந்த மருந்து மற்றும் மாத்திரைகளை கொடுத்துள்ளனர். இந்நிலையில் வயிற்று வலி சரியாகாத நிலையில் திரும்பவும் அதே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது அவரது வயிற்றை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றினுள் மீனின் நூல் இருப்பதை கண்டறிந்தனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 72வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தீராத வயிற்று வலி காரணமாக அருகிலுள்ள கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் மீனின் முள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அந்த முல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவரது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் அந்த முள் குடலில் குத்தி காயத்தை ஏற்படுத்தியது காயம் ஆறும் வரை சுமார் 8 எட்டு நாட்கள் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்த பின்னர் அவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.