12, 13, 14 தேதிகளில் தமிழகத்தில் கொட்டப்போகுது மழை! எங்க எங்கனு தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12,13,14-ம் தேதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடக்கு உள் தமிழக மாவட்டத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு  - சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசும் .

வெப்பச்சலனம் காரனமாக தருமபுரி,கிருஷ்ணகிரி, கோவை,ஈரோடு,வேலூர், திருவண்ணாமலை,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட வட மேற்கு மாவட்டத்தில் திருச்சி,கரூர் திண்டுக்கல்,தேனி, நெல்லை,விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உட்பட 15 மாவட்டத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனூர், கெங்கவள்ளியில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது,மேலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4செ.மீ மழையும்,

கடலூர் மாவட்டம் வேப்பூர்,லக்கூர்,நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது,மேலும் 20க்கும் அதிகமான இடங்களில் தலா 2 மற்றும் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் சில இடங்களில் அனல் காற்று வீசும். சென்னையை பொறுத்து வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்- அதிகபட்சமாக 39டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் .