டெல்லியில் பேன்ட் கழற்றச் சொல்கிறார்களா..? திகில் கிளப்பும் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நாடு முழுவதும் போராடம் நடந்துவந்தாலும், டெல்லிதான் போராட்டத்தின் தாய் வீடு.


ட்ரம்ப் வருகையை முன்னிட்டு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மீடியோக்களும் அங்கே நிற்க, டெல்லியில் திடீரென கலவரம் ஏற்பட்டு இதுவரை 7 பேர் வன்முறைகளில் உயிர் இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்கிறார்கள்.

இது தவிர, 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஏராளமான வாகனங்கள், குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி, ஜாஃப்ராபாத் போன்ற பகுதிகளில் மிகவும் சிக்கலான சூழல் காணப்படுகிறது.

போராட்டக்காரர்களுக்கு எதிரே நிற்பது யார் என்பதுதான் யாருக்கும் புரியாத சூழல். பா.ஜ.க. கட்சியினரா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரா, இந்து மக்களா, போலீஸா என எதுவும் புரிந்துகொள்ளாமல் இஸ்லாமியர்கள் ஒரு பக்கம் நின்று போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் எந்த ஆணிடமும் முதல் கேள்வியே, ‘நீ என்ன மதம்’ என்பதாகத்தான் இருக்கிறது. அதற்கு எப்படிப்பட்ட பதில் சொன்னாலும், அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். ஆம், நிரூபித்துக்காட்டு என்று பேன்ட்டை கழற்றுவதுதான் அவர்களுடைய ஒரே நோக்கமாக இருக்கிறது என்று கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பதிவுகள் போட்டு வருகிறார்கள்.

இந்தப் போராட்டம் ட்ரம்ப் நாட்டைவிட்டு மேலும் கடுமையாகும் என்று சொல்லப்படுகிறது. நாட்டை காப்பாற்றப்போவது யாரோ..?