பெரிதாக வெடிக்கப்போகிறது ரியல் எஸ்டேட் துறை! எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!

அடுத்ததாக வெடிக்க காத்திருக்கிறது ரியல் எஸ்டேட் துறை விவகாரம். எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன் .


2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் சரிந்துள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு இது என்றும். இந்தியாவில் கடந்த கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும். கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன எனவும். மற்ற துறைகளைக் காட்டிலும் ரியல் எஸ்டேட் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன். 

மேலும். ரியல் எஸ்டேட் துறையில் பல கோடியிலான முதலீடுகள் முடங்கி உள்ளதாகவும். சுமார் 4.5 லட்சம் வீடுகள், குறித்த காலத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடும் நஷ்டத்திற்கு உள்ளாகியதாகவும். 

கூடிய விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். தற்போது இந்தியா கடும் பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிற இந்த வேளையில். உள்நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள பல்வேறு துறைகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. 

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய முதலீடுகள் எதுவும் உருவாகவில்லை எனவும். மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும் எச்சரிக்கை செய்கிறது வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் உள்ள 9 முக்கிய நகரங்களில் சுமார் 8 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அறிக்கை ஒன்று. நாடு முழுவதும் சுமார் 5.2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கும் மிகப் பெரிய துறை இது.

2015- 2019-ம் ஆண்­டு­களில் இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யில் நேரடி அந்நிய முதலீடு சுமார் 1 லட்­சம் கோடி ரூபாய்க்­கும் மேல் முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளதாக, இந்திய ரியல் எஸ்­டேட் சேவை­ சார்ந்த நிறு­வ­ன­த்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

2026-ஆம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு 10,000 கோடி டாலரை (சுமார் ரூ.7 லட்சம் கோடி) எட்டும் என கூறுகிறது மற்றொரு ஆய்வறிக்கை. 

இந்நிலையில் .ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு தீர்வு காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. அதன்படி, நிலுவையில் இருக்கும் 1,600 வீட்டு வசதி திட்டங்களை முடிக்க உதவிடும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகையில் 10 ஆயிரம் கோடியை மத்திய அரசும், மீதம் உள்ள ரூ.15 ஆயிரம் கோடியை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி. வீட்டுக் நிறுவனமும் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில். பொருளாதார ரீதியாக கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள இந்தியாவில் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி பூதாகரமாக வெடிக்க தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

மணியன் கலியமூர்த்தி