மகன் வெற்றிக்காக விக்ரம் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாராம்..?

கொரோனா கொந்தளிப்புக்கு நடுவே அவ்வப்போது சினிமா செய்திகளும் பெரும் பஞ்சாயத்தை இழுத்துவந்து சேர்க்கின்றன.


சீயான் விகரம் இனி புதிதாக எந்த சினிமாவிலும் நடிப்பதாக இல்லை, அவரது மகனை முன்னிலைப்படுத்துவது மட்டுமே முக்கியம் என்று முடிவு எடுத்துவிட்டார் என்று செய்திகள் கசிந்தன. 

நடிகர் தியாகராஜன் பல படங்களில் நடித்துவந்த நேரத்தில், பிரசாந்த் நடிகராக அறிமுகமானார். உடனே தான் நடிப்பதை நிறுத்திகொண்டு, முழு நேரமும் பிரசாந்த் நடிப்பதற்கு உதவி செய்தார். இப்போது இரண்டு பேரும் சீனில் இல்லை என்பது வேறு விஷயம்.

அதே பாணியில், விக்ரமின் மகன் துருவ் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று குடும்ப நெருக்கடி ஏற்பட்டதாகவும், அதற்கு விக்ரம் பணிந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது இது உண்மையா என்று விசாரித்தால், அப்படி இல்லையே இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

இப்போது விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்தில் 20 வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கிறார் இன்னும் பல படங்களில் ஒப்பந்தம் ஆகிவருகிறார். மகனுக்காக தன்னுடைய நடிப்பை ஒருபோதும் விக்ரம் விடவே மாட்டார். நடிப்பு அவரது உயிர் மூச்சு என்கிறார்கள்.

அப்படின்னா, இதை யாருப்பா கிளப்பிவிட்டது?