பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!

வெட்டுக்காயப்பூண்டு சிறுசெடி ஆகும். மென்மையான, அடர்த்தியான உரோமங்கள் கொண்ட தாவரம். 1மீ.வரை உயரமானவை, தரையோடு படர்ந்து, நுனிப்பகுதி மட்டும் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்.மலர்கள், மஞ்சள் நிறமானவை, பிளவுபட்ட நாக்கு போன்றவை


இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம்.

புண்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட வேண்டும். தினமும் ஒரு முறை, புண்கள் ஆறும்வரை தொடர்ந்து செய்து வரலாம்.

பெரிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.