உடலின் உட்புறமும் வெளிப்புறமும் அழகும் ஆரோக்கியமும் தரக்கூடிய ஒரு பழம் இது!

தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.


தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வெயிலில் வெளியே சென்று வந்ததும் தக்காளியை ஒரு துண்டு எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும் மற்றும் முகம் மிகவும் மென்மையாக இருக்கும்.

வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும். தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பொதுவாக சிலருக்கு அதிகமாக முகத்தில் எண்ணெய் வடிந்தபடி இருக்கும். அவ்வாறு முகத்தில் எண்ணெய் வடிந்தபடி இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளி துண்டுகளை நன்றாக அரைத்து விழுதுதாக எடுத்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

தக்காளி தோல் மற்றும் விதை நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் அந்த கூழாக்கிய தக்காளியை முகத்தில் நன்றாக தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் இருமுறை செய்து வந்தால் ஒட்டிய கண்ணங்கள் கொழுகொழு என்று இருக்கும். 

தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுது இரண்டையும் அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று மசாஜ் செய்து வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

ஒரு தேக்கரண்டி உருளைகிழங்கு சாறு மற்றும் அரை தேக்கரண்டி தக்காளி விழுது இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும் மற்றும் முகம் பளபளவென்று இருக்கும்.