இரண்டு பக்க மூளையும் சிறந்து செயல்பட்டு மூளையின் திறன் அதிகரிக்க தோப்புக்கரணம் தான் ஒரே வழி!

கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும், யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும். இடது மூளையின் செயல்பாடு தர்க்க அறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன, ஞான அறிவு. இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்பட வேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும், அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.

ஏனெனில் கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம் பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் நம்மவர்கள் பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.