உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஒரு சுவையான உணவு இது!

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.


மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும். சர்க்கரைவள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது.

இதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.