அதிக அளவு சத்துகள் கொண்ட ஒரே பழம் பப்பாளி தான்! படிச்சு பார்த்தால் அசந்துடுவிங்க!

பப்பாளி பழம் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள். பல வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும்.


பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.

வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.

பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும். பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும்.

பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

 பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

கர்ப்பிணி பெண்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லதுஅதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்பப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்துக்களையும் தடுத்துவிடும். மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. விட்டமின் k மற்றும் c சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.

நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்ஸமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது.

அழகு பராமரிப்பிற்கும் உதவக் கூடியது. சருமத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்வதிலும், பருக்கள் இல்லா தெளிவான முகத்தைப் பெறவும் பப்பாளி பேருதவியாக இருக்கிறது. ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. 

பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் பொருத்து தண்ணீர் உற்றி கழுவினால் முகம் பளபளக்கும்