உடல் எடையை குறைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? பூண்டு டீ குடிச்சுப்பாருங்க அதிசியத்தை!

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.


பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.

பூண்டில் உள்ள அல்லிசினுடன், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க நினைத்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடியுங்கள்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இதய தமனிகளின் சுவர்களின் படிந்து, பெருந்தமனி தடிப்பை உண்டாக்கும். ஒருவர் தினமும் பூண்டு டீ குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயின்றி வாழலாம்.

ஒருவரது சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்பட்டால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். வயதான காலத்தில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் பிரச்சனையில்லை. பூண்டு டீயை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும். 

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். * பின் ஓரளவு சூடு குறைந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூண்டு டீ தயார்!