உடலில் நோயெதிர்ப்பு சக்தியில்லாமல் பலவீனமாக உணர்கிறீர்களா? அதற்கு தீர்வு தினமும் பூண்டு பால் போதுமே!

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் கோடை மற்றும் குளிர் காலங்களில் அதிக அவஸ்தைப்படுவார்கள்.


பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பண்புகள் உள்ளது. இது மட்டுமின்றி போதுமான அளவு தூங்குவது, சூரிய ஒளியில் இருப்பது, புகைபிடிக்காமல் இருப்பது, சீரான உணவுமுறை போன்றவை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் தயாராகிவிடும்.