தினமும் பால் யாரெல்லாம் குடிக்க வேண்டும் தெரியுமா? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

பசும்பால் ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் , கால்சியம்,லாக்டோஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதிலிருக்கும் லாக்டிக் அமிலம் உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. அதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நம்மை காக்கிறது.


மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்திலேயே ஆங்காங்கே நிற வேறுபாடுகள் தோன்றிடும். அதுவும் திட்டு திட்டாக தோன்றி உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திடும். இதனை போக்க வெறும் பாலை எடுத்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்களில் காய்ந்ததும் கழுவிடலாம். இப்படிச் செய்வதனால் உங்கள் முகம் பளீச்சென்று மாறும்.