கணினியும் கைபேசியும் கதிர்வீச்சால் உன் முக அழகை குறைகிறதா? அதற்கு ஆமணக்கு எண்ணெய் அற்புதம் செய்யும்!

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய்(castor Oil) அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது.


மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணையின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். 

எல்லோருக்குமே தலை முடி நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும் விளக்கெண்ணையின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலை முடிக்கு தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நிற்கும். மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.

இன்று பெரும்பாலானவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கண்பார்வைத் அழுத்தம் பாதிக்கிறது.தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

கண்ணுக்கு வேலைத்தரக்கூடிய பணிகளில் இருக்கும் இன்றைய தலை முறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்னை கண்க ளின் கீழ் இருக்கும் கருவளையம். இரவு படுக்க செல்வதற்கு முன்பு விளக்கெண்ணையை உள்ளங்கையில் ஊற்றி நன்றாக குழைத்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தில் வட்டவடிவமாக தேய்த்து மசாஜ் போல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண்கள் புத்துணர்வோடு இருக்கும். கருவளையம் இருந்த இடம் தெரியாது.