போலீஸ்காரர் மனைவியை பின் தொடர்ந்து பாலியல் சில்மிஷம்! திமுக பிரமுகர் அட்ராசிட்டி!

திமுக பிரமுகர்


சென்னை வேளச்சேரி நேருநகரை சேர்ந்தவர் திமுக பிரமுகர் ஆறுமுகம்(42) இவர் கடந்த ஒரு வார காலமாக தலைமைகாவலர் ஒருவரின் மனைவியை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்து சென்று கொண்டிருந்த போது மீண்டும் பின் தொடர்ந்து வந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிடவே பொது மக்கள் பிடித்து அடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம்(42) மீது ஏற்கனவே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.