எனக்கு ஆளுநர் பதவி கிடைத்ததற்கு அவர் தான் காரணம்! நெகிழும் தமிழிசை!

தனக்கு ஆளுநர் பதவி கிடைத்தததற்கு காரணம் யார் என்று கூறி தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ந்துள்ளார்.


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

கடுமையான உழைப்பிற்கு பா.ஜ.க. அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

தமிழக பா.ஜ.க, தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை அமித் ஷாவும், மோடியும் கொடுத்துள்ளனர். நான் இவ்வளவு பெரிய பொறுப்பிற்கு வந்ததற்கு மோடியும், அமித் ஷாவும் தான் காரணம்.

இவ்வாறு கூறி தன்னுடைய நெகிழ்ச்சியை தமிழிசை வெளிப்படுத்தியுள்ளார். தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.