தலையில் தொப்பி..! சைக்கிள் பயணம்..! அரசு ஹாஸ்பிடலுக்கு திடீரென வந்து கலெக்டர் செய்த செயல்..! நெகிழ்ச்சி சம்பவம்!

ஐதராபாத்: அரசு மருத்துவமனைகளில் சாதாரண குடிமக்கள் போல ரகசிய விசிட் அடித்து குறைகளை கண்டறியும் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு குவிகிறது.


தெலுங்கானா மாநிலம், நிசாமாபாத் மாவட்ட ஆட்சியராக நாராயண ரெட்டி என்பவர் சமீபத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆட்சியர் பதவியேற்று சில நாட்கள் கூட ஆகாத நிலையில் நாராயண ரெட்டி, அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை சரிவர இயங்குவதில்லை என தெரிந்துகொண்டார்.

இதன்பேரில், தனது தங்கும் இல்லத்தில் இருந்து, சைக்கிளிலேயே சாதாரண இளைஞர் போல நிசாமாபாத் மாவட்ட அரசு மருத்துவமனக்கு ரகசிய விசிட் அடித்தார். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்களிடம் அதிக அக்கறை காட்டாமல் வேண்டா வெறுப்பாக பல பிரிவுகளில் பணிபுரிவதை அவர் கண்டறிந்தார். அவர்களிடம் பேச்சு கொடுத்தபோது அவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.  

இந்நிலையில், இவரது நடவடிக்கைகளை கூடவே ஒருவர் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த மருத்துவமனை உயர் அதிகாரிகள், எதோ வில்லங்கம் நடக்கப் போகிறது என புரிந்துகொண்டு, மருத்துவமனை டீனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஓடிவந்து, நாராயண ரெட்டியை சந்தித்தார்.

பிறகு, அவர்தான் மாவட்ட ஆட்சியர் என்பதை புரிந்துகொண்டவர், ஊழியர்கள் தங்களது கடமையை சரிவர செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாராயண ரெட்டி பகிர்ந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்தபடி பொதுமக்களின் நலனுக்காக இத்தகைய யோசனையை செயல்படுத்திய ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.