செம லாபம் பார்த்த எச்.டி.எஃப்.சி. வங்கி! பங்கு விலை ஜிவ்வ்வ்!

2019 ஜீலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில். ரூ.6,345 கோடி லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது.


தனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி. செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 6,345 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளதாகவும், வட்டி மற்றும் பிற வருமானம் காரணமாக இதன் வருவாய் 26.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம், 33,755 கோடியாகவும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இருந்த 28,215.2 கோடியிலிருந்து தற்போது 19.6% அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வைப்புத் தொகை 10.21 டிரில்லியனாக உள்ளதாகவும், இது கடந்த செப்டம்பர் 30, 2018 விட 22.6% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 16 சதவிகிதம் லாபத்தைக் கொடுத்து, தேசிய பங்குச் சந்தை நிஃப்டியில். எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை இறுதி வர்த்தகத்தின்படி 1229 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது,