இந்தியாவின் சூப்பர் பிராண்ட் முதல் இடத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி! அடுத்தடுத்த இடங்களில் எந்த நிறுவனம் தெரியுமா?

இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகளில். கடந்த ஆறு வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎஃப்சி வங்கி..


இந்திய சந்தை மதிப்பில் 16,11,83,62,00,000 கோடி மதிப்புடைய சொத்துக்களை கொண்டு, தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது எச்டிஎஃப்சி வங்கி.

1994ல் தொடங்கப்பட்ட எச்.டி.எஃப்.சி வங்கி, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய தனியார் வங்கி நிறுவனமாகும். இந்த வங்கியின் 30 ஜூன் 2019 அறிக்கைகள் படி. சுமார் 1,04,154 நிரந்தர ஊழியர்களைக் கொண்டுள்ளதாகவும். மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டிற்கான உலகளவில் உள்ள முதல் 100 நிறுவனங்களில் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுக்காக 60 வது இடத்தைப் பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

2000 ஆண்டு வரை இந்தியாவில் செயல்பட்டு வந்த டைம்ஸ் வங்கியை‌ கையகப்படுத்தியதன் மூலம் இந்திய வணிகச் சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் முறையே 2008 ஆம் ஆண்டு செஞ்சூரியன் பேங்க் ஆஃப் பஞ்சாப் என்ற வங்கியை கையகப் படுத்தி. இன்று நாடு முழுவதும் அதிக கிளைகள் கொண்ட வங்கியாக உருமாறி உள்ளது.

இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டாக முதலிடத்தில் எச்டிஎஃப்சி வங்கியும். இரண்டாம் இடத்தில் இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி உள்ளது. முறையே மூன்றாவதாக டாடா கன்சல்டன்சி நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த மாருதி சுசூகி மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டு 8வது இடத்திற்கும். 2018ல் 9வது இடத்தில் இருந்த ஐசிஐசிஐ வங்கி இந்த ஆண்டு 10வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் வோடபோன் ஐடியா 29வது இடத்திலும், ஓயோ ஓட்டல்ஸ் 30வது இடத்திலும், ரிலையன்ஸ் ரீடெயில் 55வது இடத்திலும். உணவு வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ 60வது இடத்தையும் புதியதாக பிடித்துள்ளன.

மணியன் கலியமூர்த்தி