பெண் சுதந்திர போராட்ட தியாகிக்கு மருமகளால் நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ!

மகேந்திரகார்: வயதான மாமியாரை அடித்து உதைத்த மருமகளுக்கு, ஹரியானா மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஹரியானா மாநிலம், மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் `பாய். சுதந்திர போராட்ட வீராங்கனையான இவர், தனது 80 வயதான மாமியாரை பராமரித்து வருகிறார். இந்நிலையில், முதுமையில் தள்ளாடும் மாமியார் சாந்த் பாயை, கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றி, கன்டா பாய் அடித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அண்டை வீட்டுக்காரர் ஃபோனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, அது அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதன்பேரில், தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை முதல்வர் மனோகர் லால் கட்டார் பதிவு செய்தார்.

இதன்பேரில், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து போலீசார் அங்கே விரைந்தபோது, மருமகள் கன்டா பாய் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், பின்னர் அவரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, குடும்பச் சுமை காரணமாக, மாமியாரை அடித்ததாகக் கூறியுள்ளார். 

மாமியார் சாந்த் பாயின் கணவர் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவர். அவர் இறந்த பிறகு, சாந்த் பாய்க்கு, பென்சன் பணம் வருகிறது. ஆனால், அதையும் வாங்கி வைத்துக் கொண்டு, அவரது மருமகள் கொடுமை செய்து வந்திருப்பதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.youtube.com/watch?v=tgJXnoSxNP0