ஒரே ரூம்ல தான் தங்குவோம்..! எல்லாம் செய்வார்..! கோடம்பாக்கம் ஸ்ரீ குறித்து நிரஞ்சனாவின் பகீர் வாக்குமூலம்!

சென்னை கோடம்பாக்கத்தில் அனைத்திந்திய இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ மீது பாஜக பெண் பிரமுகர் பாலியல் தொல்லை புகார் அளித்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.


திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனி அனைத்திந்திய இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரரில், 2016 முதல் இந்து மகா சபாவில் மகளிர் அணியில் பணிபுரிந்து வந்ததாகவும் ஸ்ரீக்கு இந்தி தெரியாததால் அவர் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் தன்னையும் அழைத்து செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஸ்ரீயால் நான் சபாவுக்கு பொதுச் செயலாளர் ஆனேன். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னிடம் மட்டுமின்றி இந்த தகவலை என் உறவினர்களிடமும் கூறினார். பின்னர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கினார். மிரட்டல் விடுத்தார். என் ராஜினாமா கடிதத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பினேன்.

அதன்பின்னர் மீண்டும் சபாவுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. தன்னுடைய சகோதரர் திருமணத்திற்காக தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டேன். டெல்லியில் இருந்து வந்து தருவதாக கூறிவிட்டு கொடுக்கவில்லை. எனவே அவரால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. நீதி வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஸ்ரீ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும், ஸ்ரீ தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.