ரவுண்டு கட்டிய 6 திருநங்கைகள்! கத்திக் கதறிய ஆண் மகன்! என்ன நடந்தது தெரியுமா?

உணவு விடுதியில் ஆண்களை தாக்கிய திருநங்கைகள்; வைரல் வீடியோ


ஹரியானா: உணவு விடுதியின் வெளியே ஆண்களை சராமரியாக தாக்கிய திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவில் உள்ள கர்னால் பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் தாபா செயல்பட்டு வருகிறது.

இங்கு, சாப்பிட வந்த வாடிக்கையாளர் 2 பேரை, அங்கிருந்த 6 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து, உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி போலிசாரின் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 6 திருநங்கைகளை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், இது ஒரு கோஷ்டி மோதல் என தெரியவந்துள்ளது.