நள்ளிரவில் வீட்டுக்கு வந்த வேற்றுகிரகவாசி! வைரலாகும் சிசிடிவி காட்சி!

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஹாரிபாட்டர்' திரைப்படத்தில் வந்த கற்பனை உருவம் ஒன்று அதாவது வேற்று கிரகவாசி போன்ற ஒரு உருவம் அமெரிக்காவில் உள்ள ஒருவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


இதனை பார்த்த வீட்டு உரிமையாளர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டர் 8 பாகங்களை கடந்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் அடுத்த பகுதி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் வரும் 'டாபி' என்னும் கற்பனை கதாபாத்திரம் போல் ஒரு உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை இணையதளத்தில் பார்த்த சிலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்க மாகாணத்தின் கொலராடோ பகுதியில் விவியன் கோமஸ் என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் 'டாபி' போன்ற ஒரு உருவம் பதிவாகி உள்ளது.

அந்த உருவம் சிறிது நேரம் மட்டுமே தெரிந்த பின்னர் திடீரென மறைந்து விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. இதனை பார்த்த சிலர் தங்களது ஆச்சரியத்தை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த உருவம் வேற்று கிரகவாசியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.