கொட்டும் மழையிலும் கெட்டி மேளம்! கேரள வெள்ள நிவாரண முகாமில் கலகல திருமணம்!

ஒருபுறம் மழை கூடிக்கொண்டு இருக்கிறது.


மனிதர்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசும் தண்னார்வலர்களும் நிவாரண முகாம்களை அமைத்து மக்களை பாதுகாக்கிறார்கள்.இத்தனைக்கும் இடையில் புதிய வாழ்க்கையை உற்சாகமாகத் துவங்குகிறார்கள்,கேரளாவைச் சேர்ந்த அஞ்சு ஷைஜு தம்பதியினர்.

மலப்புறம் மாவட்டத்தில் கடலுண்டி ஆற்றின் கரையில் இருந்த அஞ்சுவின் வீடு வெள்ளத்தில் போய்விட்டது.அருகில் இருக்கும் திரிபுராந்தகர் கோவிலில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள்.இப்போது அஞ்சுவும் அவருடைய தாய் ஷோபாவும் இருப்பது மலப்புறம் எம்.எஸ்.பி லோயர் பிரமரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில்.

ஆனால் செய்தி அறிந்ததும் முகாம் வாசிகள் அனைவரும் ஒரே குடும்பமாகிவிட்டார்கள்.அவர்களின் ஆரரவுடன் அஞ்சுவின் திருமணம் களைகட்டியது.அஞ்சுவுக்கு  புத்தாடைகள் அலங்காரம் எல்லாம் சிறப்பாக நடந்தது.மனமகன் ஷைஜு சரியான சமையத்திற்கு வந்து சேர உறவினர்களும், முகாம் வாசிகளும் வாழ்த்த திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திரிபுராந்தகர் ஆலயத்தின் சார்பாக திருமண விருந்தும் நடைபெற்றது.