ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்..! வலுக்கும் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா எடப்பாடி

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் போன்று சென்னை, வண்ணாரப்பேட்டையிலும் ஆயுதங்கள் சேகரிக்கப்படுவதாக ஒரு ட்வீட் போட்டார் ஹெச்.ராஜா. அந்த விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது.


இப்போது தமிழகமெங்கும் இஸ்லாமியர்கள் போராட்டம் வலுத்துவருகிறது. டெல்லியைப் போன்று இல்லாமல், அமைதியான வழியில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் வாங்குவதுடன், கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

1. டில்லி கலவரங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி மாநில அரசிடம் காவல்துறை அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

3. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஹெச்.ராஜாவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதோடு அவரது சமூகவலைதளங்களை முடக்க வேண்டும்.

இவற்றில் மற்ற இரண்டு கோரிக்கைகள் நிறைவேறினாலும், நிறைவேறுமே தவிர, ஹெச்.ராஜாவை கைது செய்வது நடக்கவே செய்யாத விஷயம் என்று சொல்லவே வேண்டியதில்லை.

ஏனென்றால், அவர் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிக்கினாலும், இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும், அவர் அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவராக வர இருக்கிறார் என்பதாலும் எடப்பாடி தயங்குவார் என்றே தெரிகிறது.

அதுசரி, இல்லையென்றாலும்...