சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் ஹெச்.ராஜா! எச்சரிக்கை செய்யும் ரசிகர் மன்றத்தினர்!

மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வு குறித்து தன்னுடைய கருத்தை தெளிவாக பதிவு செய்தார் சூர்யா.


அவருக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில், அது என் ஆசையல்ல என்று தெளிவு கொடுத்துவிட்டார். ஆனால், சூர்யாவை அரசியலுக்கு இழுத்துவந்தே தீருவது என்ற ரீதியில் இப்போது பா.ஜ.க.வினர் வேலை பார்த்து வருகின்றனர். சூர்யா மீது முதல் கல்லை வீசினார் ஹெச்.ராஜா. அதாவது சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுவது போல் இருக்கிறதாம்.

உடனே ராஜாவுக்கு முட்டு கொடுப்பது போன்று தமிழிசையும் சூர்யாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. நிம்மதியா சினிமாவில் நடித்துக்கொண்டு, அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு உண்மையிலே உதவி வருகிறார் சூர்யா. இந்த நிலையில் இப்படி தேவையில்லாமல் அவரை வம்புக்கு இழுப்பதும், அவரை அரசியலுக்கு இழுப்பதும் ஒன்றுதான் என்று சூர்யாவின் ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.

இனியும் அவர் சம்பாதித்துத்தான் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் மக்கள் தொண்டு செய்வதில் எந்த ஒரு அரசியல் கட்சியையும்விட சூர்யாவின் மன்றங்கள் சிறப்பானவை. அதனால், வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். என்னப்பா ராஜா... உன்னுடைய பதிலைச் சொல்லு.