இந்து மதத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு பிரச்சாரம்! கமல் கட்சிக்கு விரைவில் தடை!

பாரதிய ஜனதாவின் பி டீம் என்று வருணிக்கப்பட்டவர் கமல்ஹாசன். இந்த நேரத்தில், இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அந்த முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல்ஹாசன் பேசியிருக்கும் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


ஏனென்றால், நாதுராம் கோட்சேவை பா.ஜ.க. முழுக்க முழுக்க ஆதரவு தெரிவித்துவருகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். அப்போது கமல்ஹாசன், ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் பேரனாக இதனை சொல்கிறேன் என்று பேசிய விவகாரம் காவிகளிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இன்று கமல்ஹாசன் விவகாரத்துக்கு டிவீட் போட்டிருக்கும் ஹெச்.ராஜா, கடுமையாக கண்டித்திருக்கிறார். கமல்ஹாசனை அடையாளம் காண்போம். இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும், நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லீம் ஓட்டுக்காக இப்படியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஹெச்.ராஜா.

மேலும், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச் செடிதான் ம.நீ.ம. திருப்புவனம் இராமலிங்கம் கொலையை கண்டிக்காத கோழை என்றும் சூடு கிளப்பியிருக்கிறார் ராஜா. சும்மாவே டென்ஷனாகும் தமிழிசை இந்த விவகாரத்தில், மகாத்காவின் படுகொலையைக் கண்டித்து நாடே பதறியது. கொலையாளி தூக்கிலிடப்பட்டார். ஆனால், அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனம் ஆபத்து என்று கூறியிருக்கிறார். 

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பாஜக. கமல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மதத்தை குறிப்பிட்டு பேசியதால் கமல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தன்னுடைய  திரைப்படத்தை ஓடவிடவில்லை என்றால், இந்திய நாட்டைவிட்டே போய்விடுவேன் என்று பேசிய இந்தியக் குடிமகனா இப்படி பேசுவது என்று காவிப் படை கொந்தளிக்கிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...